பாளையங்கோட்டைஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 7 மாத கர்ப்பிணி சாவு குழந்தையும் இறந்த பரிதாபம்


பாளையங்கோட்டைஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் 7 மாத கர்ப்பிணி சாவு குழந்தையும் இறந்த பரிதாபம்
x
தினத்தந்தி 3 May 2019 3:30 AM IST (Updated: 3 May 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி இறந்தார். அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

பேட்டை,

நெல்லை பேட்டை எம்.என்.பி. சன்னதி தெருவை சேர்ந்தவர் தக்கரை பீர்முகம்மது (வயது 35). இவர் சேரன்மாதேவி ரோட்டில் பீரோ விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், நாஞ்சான்குளத்தை சேர்ந்த மெய்யழகன் மகள் சுபைதா பாத்திமாவுக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுபைதா பாத்திமா தற்போது 7 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. உடனே உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதில் பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது.

தொடர்ந்து சுபைதா பாத்திமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மெய்யழகன் பேட்டை போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். சுபைதா பாத்திமாவுக்கு திருமணம் ஆகி ஒரு ஆண்டே ஆவதால் இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் மணீஷ் நாரணவரே மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story