காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி உறுதி


காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி உறுதி
x
தினத்தந்தி 3 May 2019 4:30 AM IST (Updated: 3 May 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி வாக்குறுதி அளித்தார்.

க.பரமத்தி,

அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க. வேட்பாளர் வி.செந்தில்பாலாஜி க.பரமத்தி ஒன்றியம் தென்னிலை கிழக்கு ஊராட்சிக்கு உட்பட்ட வடபழனி, தொப்பம்பட்டி, காந்திநகர், அம்மன்நகர், தென்னிலை கடைவீதி உள்பட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

நான் வெற்றி பெற்றவுடன் அரவக்குறிச்சி தொகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பேன். துக்காச்சி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பேன். நிலம் இல்லாதவர்களுக்கு உடனடியாக 3 சென்ட் நிலம் வழங்க நடவடிக்கை எடுப்பேன். இந்த பகுதியில் நொய்யல் நீர்த்தேக்கம் உள்ளது. இதில் மழை காலங்களில் நொய்யல் ஆற்றில் வரும் உபரிநீரை சேமித்து இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தி விவசாயம் செய்ய உரிய நடவடிக்கை எடுப்பேன்.

இந்த பகுதியில் கலைக்கல்லூரி, பஸ் போக்குவரத்து, தார் சாலை, சிமெண்டு சாலை அமைத்து அரவக்குறிச்சி தொகுதியை தமிழகத்தின் முன்மாதிரி தொகுதியாக மாற்ற பாடுபடுவேன். எனவே எனக்கு இந்த முறை உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டுமென பாதம் தொட்டு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி, மாநில நெசவாளர் அணி செயலாளர் பரணிமணி, க.பரமத்தி ஒன்றிய செயலாளர் கே.கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர். 

Next Story