பொம்மிடி அருகே லாரி மோதி வாலிபர் பலி உறவினர்கள் சாலைமறியல்
பொம்மிடி அருகே லாரி மோதி வாலிபர் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பயர்நத்தம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் சுபாஷ் (வயது 21). டிப்ளமோ முடித்துள்ளார். இந்தநிலையில் நேற்று சுபாஷ் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து வீட்டிற்கு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
பொம்மிடி அருகே தேவராஜம்பாளையம் என்ற இடத்தில் சென்ற போது எதிரே வந்த லாரி எதிர்பாராதவிதமாக சுபாஷ் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுபாஷ் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து அறிந்த அவரது உறவினர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்து சுபாசின் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் ஆத்திரமடைந்த அவர்கள் அப்பகுதியில் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் கடத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டனர். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் சுபாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாப்பிரெட்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story