அரிமளம் ஒன்றியத்தில் சாலையோரத்தில் மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் நெடுஞ்சாலைத்துறையினர்
அரிமளம் ஒன்றியத்தில் சாலையோரத்தில் மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
அரிமளம்,
கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை மாவட்டத்தை கஜா புயல் தாக்கியது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் இருந்த மரங்கள் உள்பட ஏராளமான மரங்கள் சாய்ந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்களும் உடைந்து விழுந்தன. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அவதி அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான மரங்கள் புயலின்போது சாய்ந்து விட்டதால், தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்று வீசுகிறது.
இதனால் நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே உள்ள மரங்களின் நிழலில் வாகனங்களை நிறுத்தி சிறிது நேரம் ஓய்வு எடுத்து செல்கின்றனர். மேலும் சில வாகன ஓட்டிகள் சாலையோரத்தில் விற்பனை செய்யப்படும் வெள்ளரி, தர்ப்பூசணி போன்றவற்றை வாங்கி சாப்பிட்டும், இளநீர் மற்றும் குளிர் பானங்களை வாங்கி குடித்து விட்டு செல்கின்றனர். இதனால் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலையோர கடைகள் அதிகரிக்க தொடங்கி உள்ளன.
இந்நிலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நெடுஞ்சாலைகளின் இரு பகுதிகளி லும் மரங்களை நட்டு வளர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரிமளம் ஒன்றியத்தில் முதல் கட்டமாக 330 மரக்கன்றுகளை நட்டு பரா மரிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து அரிமளம் ஒன்றியம் நமணசமுத்திரம், மிரட்டுநிலை, ஓணாங்குடி, கீழப்பனையூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மரக்கன்றுகள் நடப்பட்டு, அதை பாதுகாக்க கூண்டுகள் அமைத்து வருகின்றனர்.
இதில் நாவல், புளி, பூவரசு உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகளை நட்டு நெடுஞ்சாலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர்.
தற்போது அடிக்கும் வெயிலினால் மரக்கன்றுகள் பட்டுவிடாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறையினர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி மரக்கன்றுகளை பராமரித்து வருகின்றனர். சாலை ஓரங் களில் நடப்பட்டு வளர்க்கப் படும் மரக்கன்றுகள் நன்றாக வளர்வதற்கு ஏதுவாக தொடர்ந்து தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தற்போது மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவதற்கு வாடகை லாரிகளை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கு பதிலாக சொந்தமாக தண்ணீர் லாரிகள் வாங்கி 50 மரக்கன்றுகளை பராமரிக்க ஒரு சாலை பணியாளர் என நியமனம் செய்தால், மட்டுமே அரசின் மரம் வளர்க்கும் திட்டம் வெற்றி அடையும், என்றார்.
Related Tags :
Next Story