மதுரை கோட்டத்தில் என்ஜினீயரிங் பணி: திருச்சிக்கு ரெயில்கள் தாமதமாக வந்து செல்லும் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு
மதுரை கோட்ட ரெயில்வேயில் என்ஜினீயரிங் பணி நடைபெற உள்ளது. இதையொட்டி திருச்சிக்கு ரெயில்கள் தாமதமாக வந்து செல்லும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
திருச்சி,
*மதுரை-சென்னை வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 12636) திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கு வருகிற 30-ந் தேதி வரை 15 நிமிடங்கள் தாமதமாக வரும்.
*குருவாயூர்-சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில் (16128) வருகிற 29-ந் தேதி வரை திருச்சிக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும் (வருகிற 9, 16, 23 ஆகிய தேதிகள் தவிர). இதே ரெயில் வருகிற 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் 30 நிமிடங்கள் தாமதமாக திருச்சி வரும்.
*மதுரை-சென்னை தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் (22672) வருகிற 30-ந் தேதி வரை திருச்சிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வரும் (வியாழக்கிழமை தவிர).
*நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (16352) திருச்சிக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை), வருகிற 9, 19, 23 ஆகிய தேதிகளில் 45 நிமிடங்கள் தாமதமாக வரும். மேலும் இதே ரெயில் வருகிற 12, 16, 26, 30 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும்.
*கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (12666) வருகிற 11, 25 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்து புறப் படும். மேலும் இதே ரெயில் இன்றும் (சனிக்கிழமை), 18-ந் தேதியும் திருச்சிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வரும்.
*மதுரை-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (17616) நாளை மற்றும் 19-ந் தேதி திருச்சிக்கு 20 நிமிடங்கள் தாமதமாக வந்தடையும். இதே ரெயில் வருகிற 12, 26 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வரும்.
* நாகர்கோவில்-கச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரெயில் (16354) திருச்சிக்கு 7, 21-ந் தேதிகளில் 20 நிமிடங்களும், 14, 28 ஆகிய தேதிகளில் 10 நிமிடங்களும் தாமதமாக வரும்.
*சென்னை-பிக்கானர் எக்ஸ்பிரஸ் ரெயில் (22631) வருகிற 9, 23 ஆகிய தேதிகளில் திருச்சிக்கு 45 நிமிடங்கள் தாமதமாக வந்து செல்லும். இதே ரெயில் வருகிற 16, 30-ந் தேதிகளில் திருச்சிக்கு 10 நிமிடங்கள் தாமதமாக வரும்.
* தூத்துக்குடி-சென்னை சிறப்பு கட்டண ரெயில் (06054) வருகிற 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை திருச்சிக்கு 10 நிமிடங்கள் தாமதமடையும்.
*திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (22628) வருகிற 16-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை திருச்சிக்கு 15 நிமிடங்கள் தாமதமாக வரும். இதே ரெயில் வருகிற 14, 15-ந் தேதிகளில் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் திருச்சிக்கு தாமதமாக வந்தடையும்.
மேற்கண்ட தகவல் திருச்சி கோட்ட ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story