கோவிலில் சாமி தரிசனம் செய்த போது மூதாட்டியிடம் 4 பவுன் சங்கிலி திருட்டு - மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
பட்டுக்கோட்டை அருகே கோவிலில் சாமி தரிசனம் செய்த போது மூதாட்டியிடம் இருந்து 4 பவுன் சங்கிலியை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பட்டுக்கோட்டை,
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த சூரப்பள்ளம் பிரதான சாலை தெருவைச் சேர்ந்தவர் திருஞானம். இவருடைய மனைவி சீதாலெட்சுமி (வயது 75). இவர் சம்பவத்தன்று கரம்பயம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்து பார்த்த போது சீதாலெட்சுமி தனது கழுத்தில் கிடந்த 4 பவுன் சங்கிலி காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த போது கூட்ட நெரிசலில் மர்ம நபர்கள், சீதாலெட்சுமி கழுத்தில் கிடந்த சங்கிலியை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து சீதாலெட்சுமி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story