கடலூர் சில்வர்பீச்சில் துப்புரவு பணி கலெக்டர் அன்புசெல்வன் ஆய்வு
கடலூர் சில்வர் பீச்சில் துப்புரவு பணியை கலெக்டர் அன்புசெல்வன் தொடங்கி வைத்து ஆய்வு செய்தார்.
கடலூர்,
கடலூர் நகர மக்களின் பொழுது போக்கு இடமாக சில்வர் பீச் அமைந்துள்ளது. தற்போது கோடை விடுமுறை என்பதால் மக்கள் அதிகளவில் கடற்கரைக்கு வந்து செல்கின்றனர். கொளுத்தும் வெயிலின் கொடுமையில் இருந்து ஆறுதல் பெறும் வகையில் காலை, மாலை நேரங்களில் காற்றுவாங்குவதற்காக பொதுமக்கள் வந்து செல்கிறார்கள். இதன் காரணமாக கடலூர் சில்வர் பீச்சில் குப்பைகள் குவிந்து கிடந்தன.
இந்த நிலையில் கடலூர் சில்வர் கடற்கரையை சுத்தம் செய்யும் பணி நேற்று காலை நடைபெற்றது. இதில் கடலூர் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுமார் 450 பேர் கலந்துகொண்டு கடற்கரை பகுதிகளில் கூட்டு துப்புரவு பணிகளை மேற்கொண்டனர். பின்னர் சேகரித்த குப்பைகளை அப்புறப்படுத்தி னர். இந்த பணியை கலெக்டர் அன்புசெல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், கடற்கரை பகுதியில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளதை மாற்றி புதிதாக விளையாட்டு உபகரணங்கள் அமைக்க சம்மந்தப்பட்ட அலுவலர்களை கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து கடற்கரை அருகில் உள்ள படகு குளத்தை பார்வையிட்ட அவர், பொதுமக்கள் படகு சவாரி செய்யும் வகையில் அதை தயார் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது கடலூர் சப்-கலெக்டர் சரயூ நகராட்சி ஆணையர் (பொறுப்பு) டாக்டர்.அரவிந்த் ஜோதி, சுகாதார ஆய்வாளர்கள் பாக்கியநாதன், மணிவண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story