பண்ருட்டி அருகே இரு பிரிவினரிடையே மோதல்; 2 பேர் கைது


பண்ருட்டி அருகே இரு பிரிவினரிடையே மோதல்; 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 May 2019 3:45 AM IST (Updated: 4 May 2019 11:20 PM IST)
t-max-icont-min-icon

பண்ருட்டி அருகே இருபிரிவினரிடையே நடந்த மோதலில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பண்ருட்டி, 

பண்ருட்டி அருகே உள்ள கோ.குச்சிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், மேல்கவரப்பட்டு பகுதியை சேர்ந்தவர்களுக்கும் நேற்று முன்தினம் மோதல் ஏற்பட்டது. இதில் கல்வீசி தாக்கி கொண்டதால், அங்கு பெரும் பதற்றம் நீடித்தது. இதையடுத்து அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த தர்மராஜ்(வயது 45) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் பண்ருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்திரைசாவடியை சேர்ந்த ரகுபதி, தயாளன், கோ.குச்சிப்பாளையம் பன்னீர், சந்தோஷ், வடிவேல், அன்பு, தங்கராஜ், ஏழுமலை ஜெகன், சங்கர் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தயாளனை கைது செய்தனர்.

இதேபால் சித்திரைசாவடியை சேர்ந்த தயாளன் கொடுத்த புகாரின் பேரில் மேல்கவரப்பட்டை சேர்ந்த முருகேசன் மகன்கள் திவான், திவாகர், தர்மராஜ்(45), சீத்தாராமன், தவசி ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 13 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story