கணவரை கொன்று நாடகமாடிய பெண் தாய், சகோதரியுடன் கைது
கணவரை கொன்று நாடகமாடிய பெண் தனது தாய், சகோதரியுடன் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
மும்பை டிராம்பே சீத்தாகேம்ப் ஜி செக்டர் பகுதியை சேர்ந்தவர் ரகீம் கான் (வயது35). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சல்மா. இவர்களுக்கு 15, 12 வயதுடைய 2 மகள்கள் உள்ளனர். சம்பவத்தன்று இரவு 2.30 மணி அளவில் ரகீம்கான் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். மதுகுடித்துவிட்டு வந்த கணவரை சல்மா கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ரகீம் கான் மனைவி சல்மாவை பிடித்து தாக்கி உள்ளார். வலி தாங்க முடியாத சல்மா அருகே உள்ள வீட்டில் வசித்து வரும் தாய் பில்கிஷ் (50) சகோதரி தாஜ் உன்னிசா (27) ஆகியோரை உதவிக்கு அழைத்து உள்ளார்.
இதையடுத்து பில்கிசும், தாஜ் உன்னிசாவும் அங்கு சென்றனர். அப்போது ரகீம்கான் அவர்களையும் திட்டினார். இதில் ஆத்திரமடைந்த சல்மா உள்பட 3 பேரும் ரகீம் கானை தாக்கி சுவரில் தலையை மோத செய்தனர். இதில் நிலைகுலைந்த அவர் மயங்கி விழுந்தார். இதனால் பதற்றம் அடைந்த சல்மா தனது கணவரை தாய் பில்கிஷ், சகோதரி தாஜ் உன்னிசாவுடன் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதனை நடத்திய டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார்.
இதனால் சல்மா தனக்கு அறிமுகமான மற்றொரு டாக்டரிடம் சென்று தனது கணவர் குடிபோதையில் தவறி விழுந்து உயிரிழந்ததாக மரண சான்றிதழ் பெற்று கொண்டார். பின்னர் அவரின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்து வந்தனர்.
இந்தநிலையில் ரகீம்கானின் சகோதரர் அகீல் அகமதுக்கு (53) அவரது சாவில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் அங்கு சென்று இறுதி சடங்கு செய்ய முயன்ற ரகீம் கானின் உடலை மீட்டு ஆய்வு நடத்தினர். இதில் காயங்கள் இருந்ததால் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பலியான ரகீம்கானின் 12 வயது மகள், தாய் உள்ளிட்ட 3 பேர் தந்தையை அடித்து கொலை செய்ததை கூறினாள். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்து ஆதாரங்களை மறைக்க முயன்ற சல்மா, அவரது தாய் பில்கிஷ், சகோதரி தாஜ் உன்னிசா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் தவறி விழுந்து உயிரிழந்ததாக மரண சான்றிதழ் கொடுத்த டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story