மாவட்ட செய்திகள்

விஷம் குடித்து பெண் தற்கொலை + "||" + The suicide of a woman drunk by poison

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தற்கொலை
ஜக்குபட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி அழகுராணி விஷம் குடித்து பெண் தற்கொலை செய்துகொண்டார்.
மொரப்பூர்,

தர்மபுரி மாவட்டம் ஜக்குபட்டியை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மனைவி அழகுராணி (வயது 45). இதனிடையே கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அழகுராணி வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கம்பைநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அழகுராணியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.