அக்னி நட்சத்திரம் தொடங்கியது: நாகையில் சுட்டெரித்த வெயில் பொதுமக்கள் அவதி


அக்னி நட்சத்திரம் தொடங்கியது: நாகையில் சுட்டெரித்த வெயில் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

அக்னி நட்சத்திரம் நேற்று தொடங்கியதால் நாகையில் வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகையில் கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே கடந்த மாதம் 100 டிகிரி வெயில் சுட்டெரித்தது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்லாமல் வீடுகளில் முடங்கி கிடந்தனர். பகலில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இரவிலும் காணப்பட்டது. வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் இளநீர், நுங்கு, தர்பூசணி, கரும்பு ஜூஸ் உள்ளிட்டவைகளை நாடி சென்றனர். இதனால் குளிர்பானங்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவான பானி புயலால் தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்தது. ஆனால் மழை பெய்யாமல் வெயில் சுட்டெரித்தது. இதையடுத்து பானி புயல் திசை மாறி சென்று ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் கரையை கடந்தது.

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் நேற்று முதல் தொடங்கியது. இதனால் நாகையில் வெயில் சுட்டெரித்தது. வெப்பம் காரணமாக சாலையில் கானல் நீர் தோன்றியது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வெளியில் செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், நடந்து செல்பவர்கள் குடைப்பிடித்தப்படி சென்றனர். இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் முகத்தை மூடியபடி சென்றனர்.

Next Story