பாடாலூரில் ஜவுளி பூங்கா விரைவில் அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


பாடாலூரில் ஜவுளி பூங்கா விரைவில் அமைக்க வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 5 May 2019 4:15 AM IST (Updated: 5 May 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

பாடாலூரில் ஜவுளி பூங்காவினை விரைந்து அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் துறைமங்கலத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் செல்லத்துரை முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில செயலாளர் சாமி. நடராஜன் கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படாததால், அதற்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். படைப்புழுவால் பாதிக்கப்பட்ட மக்காச்சோள பயிர்களுக்கு நிவாரணத்தை உடனடியாக அரசு வழங்க வேண்டும். வறட்சி மாவட்டமான பெரம்பலூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெரம்பலூரில் மக்காச்சோளத்திற்கு, அடுத்த படியாக பருத்தி அதிகமாக உற்பத்தியாகிறது. எனவே பாடாலூரில் ஜவுளி பூங்காவினை விரைந்து அமைத்து, வேலை வாய்ப்பினை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சின்ன முட்லு அணையை கட்டுவற்கான பணியை அரசு தொடங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story