மோகனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது ரூ.60 ஆயிரம் பறிமுதல்


மோகனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது ரூ.60 ஆயிரம் பறிமுதல்
x
தினத்தந்தி 6 May 2019 3:45 AM IST (Updated: 5 May 2019 10:10 PM IST)
t-max-icont-min-icon

மோகனூரில் போலி லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

மோகனூர், 

மோகனூர் பகுதியில் போலி லாட்டரி சீட்டுகள் விற்பனை நடைபெறுவதாக மோகனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜான்பாஷா மற்றும் போலீசார் சுற்று வட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் காட்டுப்புத்தூரை சேர்ந்த ஜெயபால் (வயது 58), சுக்காம்பட்டியை சேர்ந்த மணிகண்டன் (வயது 24) என்பதும், போலி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 168 போலி லாட்டரி சீட்டுகள், ரூ.60 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story