சிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டையில் மின்குறைபாட்டை போக்க பொதுமக்கள் வலியுறுத்தல்


சிங்கம்புணரி, எஸ்.எஸ். கோட்டையில் மின்குறைபாட்டை போக்க பொதுமக்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 6 May 2019 4:00 AM IST (Updated: 6 May 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டையில் மின்குறைபாட்டை போக்க பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டையில் போதிய மின்சாரம் இன்றி பொதுமக்கள் திண்டாடாடி வருகின்றனர். குறிப்பாக சிங்கம்புணரி, எஸ்.எஸ்.கோட்டை, செவல்பட்டி, சியாஎமுத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் குறைந்த மின்அழுத்தம் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் பெரிதும் பாதிப்பு உள்ளாகி வருகின்றனர்.

ஒருநாளைக்கு சில மணி நேரம் வரும் மின்சாரமும் குறைந்த அழுத்தத்தில் சிறிது நேரம் விட்டு விட்டு வருவதால், வீட்டு மின்சாதனங்கள் பழுதாகியும், குடிநீர் வினியோகம் இல்லாமலும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இந்த பகுதியில் தொழில் செய்பவர்கள் கூறியதாவது:– நீண்ட நாட்களாக குறைந்த மின்அழுத்தம், அடிக்கடி மின்துண்டிப்பாலும் மிகவும் சிரமத்துக்குள்ளாகிறோம். மின்சாரம் இன்றி எந்த தொழிலும் செய்ய முடியவில்லை.

தற்போது ஒருநாளைக்கு 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வருகிறது. அதுவும் குறைந்த மின்அழுத்தத்துடன் வருகிறது. பின்பு 1 மணி நேரத்திற்கு ஒரு முறை திடீரென மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் எந்த தொழிலும் செய்ய முடியவில்லை. தொழில்கள் பாதிப்பால் பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்த மின்குறைபாட்டை போக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இதுபோல சியாமுத்துப்பட்டியை சேர்ந்த பெண்கள் கூறும் போது, குறைந்த மின்அழுத்த மின்சாரம் வருவதால், வீட்டு உபயோக மின்சாதன பொருட்களை உபயோகிக்க முடியாமல் அவை அடிக்கடி சேதமடைந்து வருகின்றன. இதற்காக அதிக செலவுகள் செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடும் வெயிலால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மின்விசிறி இயங்காததால் அவதியடைகின்றனர். வீட்டு உபயோகத்திற்கு அத்தியவசியமாக மோட்டார் இயங்காததால், தண்ணீர் பற்றாக்குறையால் சிரமமடைந்து வருகிறோம்.

பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி வேண்டியதாக உள்ளது. விவசாய மின்மோட்டார்கள் இயக்க முடியாததால் தென்னை உள்ளிட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாததால், விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன.

வருடக்கணக்கில் இந்த நிலை நீடிப்பதால் நாங்கள் தினமும் அவதியடைந்து வருகிறோம் என்றனர். மேலும் பொதுமக்கள், தொழிலாளிகள், விவசாயிகள் என பலதரப்பினரும் இந்த பிரச்சினைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story