விருதுநகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவத்தினர் மோதல்


விருதுநகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவத்தினர் மோதல்
x
தினத்தந்தி 6 May 2019 4:16 AM IST (Updated: 6 May 2019 4:16 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் வாக்கு எண்ணிக்கை மையத்தில் துணை ராணுவத்தினர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர்,

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி மற்றும் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 18–ந்தேதி நடந்தது. அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியிலும், சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்குப்பதிவு எந்திரங்கள் செந்திக்குமார நாடார் கல்லூரியிலும் வைக்கப்பட்டுள்ளன.

இங்கு ஆயுதப்படை, சட்டம்–ஒழுங்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர், சிறப்பு ஆயுதப்படை என 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதில் இந்தோ–திபெத் துணை ராணுவ படையினர் பணியில் உள்ளனர். இவர்களுக்கான பணி நேரம் தொடர்பாக துணை ராணுவத்தினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் உயர் அதிகாரிகள் விரைந்து வந்து சமரசம் செய்து பிரச்சினைக்கு முடிவுக்கு கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story