விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை


விளையாட்டு வீரர்களுக்கு துணை ராணுவத்தில் வேலை
x
தினத்தந்தி 6 May 2019 1:14 PM IST (Updated: 6 May 2019 1:14 PM IST)
t-max-icont-min-icon

இந்திய திபெத்திய எல்லை காவல் படையில் விளையாட்டு வீரர் களுக்கான ஒதுக்கீடு அடிப்படையில் கான்ஸ்டபிள் பணிக்கு 10-ம் வகுப்பு படித்தவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்திய திபெத்திய எல்லைக் காவல்படை சுருக்கமாக ஐ.டி.பீ.பி. (ITBP) என அழைக்கப் படுகிறது. துணை ராணுவ படையான இதில் தற்போது விளையாட்டு ஒதுக்கீடு 2019 அடிப் படையில் கான்ஸ்டபிள் (பொது) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. குரூப்-சி பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்களாகும். மொத்தம் 121 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பு பவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 21-6-2019-ந் தேதியில் 18 வயது நிரம்பியவர்களாகவும், 23 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். மத்திய அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி

மெட்ரிகுலேசன் (10-ம் வகுப்பு) தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இவர்கள் தட களம், நீர் விளையாட்டுகள், குத்துச்சண்டை, வுசு, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், ஜூடோ, ஜிம்னாஸ்டிக், வில்வித்தை, பனிச்சறுக்கு, கராத்தே போன்ற விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் தேசிய, ஆசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் பெற்றவர்களாக இருக்க வேண்டும். 1-1-2017 முதல் 21-6-2019 வரை இடைப்பட்ட காலத்தில் விளையாட்டில் சாதித்தவர்களே விண்ணப்பிக்க முடியும்.

கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு ஆண் விண்ணப்பதாரர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். அனைத்து பிரிவு பெண் விண்ணப்பதாரர்கள், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஆகியோர் இந்த கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

முக்கிய தேதிகள்

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 21-6-2019-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.recruitment.itbpolice.nic.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story