வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை


வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை
x
தினத்தந்தி 7 May 2019 3:15 AM IST (Updated: 7 May 2019 12:40 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்தவர் வாசகம். மீனவர். இவருடைய மனைவி செல்வி (வயது 47). இவர்களுக்கு 5 மகன்கள் உள்ளனர். 5 பேரும் சரியாக வேலைக்கு செல்வது இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு நடந்து உள்ளது.

இதனால் மனமுடைந்த செல்வி கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்த டீசலை எடுத்து தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி புதுக்கோட்டை அருகே உள்ள தெற்கு சிலுக்கன்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசபெருமாள். இவருடைய மனைவி சுப்புலட்சுமி (75). கணேசபெருமாள் இறந்து விட்டார். இவர்களுடைய மகன் அதே பகுதியில் வசித்து வருகிறார். சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இதனால் மனமுடைந்த சுப்புலட்சுமி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story