கா.அம்பாபூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள்


கா.அம்பாபூரில் குடிநீர் தட்டுப்பாட்டால் தவிக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 7 May 2019 4:00 AM IST (Updated: 7 May 2019 1:21 AM IST)
t-max-icont-min-icon

கா.அம்பாபூரில் ஏற் பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம், காவனூர் ஊராட்சிக்கு உட்பட்ட கா.அம்பாபூர் கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவைக்காக அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் தெற்கு தெருவில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் பருவ மழை பொய்த்து போனதால் அரியலூர் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

இதனால் ஆழ்குழாய் கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் குறிப்பிட்ட நேரம் மட்டும் ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் மற்றும் அத்தியவசிய தேவைகளுக்கு போதுமான அளவு தண்ணீரின்றி மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கா.அம்பாபூர் அருகே சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள அக்கியால் என்ற கிராமத்திற்கு குடங்களுடன் சென்று மோட்டார் சைக்கிள், சைக்கிள்களில் தண்ணீர் பிடித்து வருகின்றனர்.

மேலும் மாரியம்மன் கோவில் அருகே உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆங்காங்கே சேதமடைந்தும், சரிவர பராமரிக்காததால் தண்ணீர் அசுத்ததோடு வருவதால் பொதுமக்கள் அதனை குடிக்க பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நீர்த்தேக்க தொட்டியை அப்புறப்படுத்திவிட்டு, புதிதாக நீர்த்தேக்க தொட்டி கட்டிதர வேண்டும். மேலும் மாவட்ட நிர்வாகம் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து உடனடியாக தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர் களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story