கோட்டக்குப்பம் அருகே, தொழிற்சாலையில் மின்கம்பிகள் திருடிய 2 பேர் கைது
கோட்டக்குப்பம் அருகே தொழிற்சாலையில் மின்கம்பிகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
கோட்டக்குப்பம் அருகே பெரம்பை சாலையில் தனியார் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக புதுச்சேரியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (வயது 39) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 4-ந் தேதியன்று மாலை தொழிற்சாலையை பூட்டிவிட்டு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் தொழிற்சாலையை திறந்தபோது அங்கிருந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள மின்கம்பிகளை காணவில்லை. அவை திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து கோபாலகிருஷ்ணன், கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் புதுச்சேரி கல்மேடுபேட்டையை சேர்ந்த வேலாயுதம் மகன் வீரமணி (22), குருமாம்பேட்டையை சேர்ந்த சந்திரன் மகன் கார்த்தி (26) ஆகியோர் தொழிற்சாலையில் இருந்த மின் கம்பிகளை திருடியது தெரியவந்தது.
இதையடுத்து வீரமணி, கார்த்தி ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்த மின்கம்பிகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story