நாகை மாவட்டத்தில்,சாராயம் கடத்திய 2 பெண்கள் உள்பட 31 பேர் கைது - 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்


நாகை மாவட்டத்தில்,சாராயம் கடத்திய 2 பெண்கள் உள்பட 31 பேர் கைது - 6 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 7 May 2019 4:15 AM IST (Updated: 7 May 2019 5:16 AM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் சாராயம் கடத்திய 2 பெண்கள் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 6 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்டத்தில் மது கடத்தலை தடுக்கும் வகையில் போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரிலும், உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன் அறிவுறுத்தலின் படியும் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு பல லட்சம் ருபாய் மதிப்பிலான சாராயம், மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 4 மற்றும் 5-ந் தேதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்ததாக மேலவாழக்கரை ராமன்கோட்டகம் காலனி தெருவை சேர்ந்த சந்திரசேகர் மனைவி வேம்பு (வயது 38), அனுமந்தபுரம் முதலைமேட்டை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி உமா (38) உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4 ஆயிரத்து 345 லிட்டர் சாராயமும், மதுப்பாட்டில்களும், கடத்தலுக்கு பயன்படுத்திய 6 மோட்டார் சைக்கிள்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story