முதல்-மந்திரி குமாரசாமியுடன் சேர்ந்து சித்தராமையாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சியா? மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்


முதல்-மந்திரி குமாரசாமியுடன் சேர்ந்து சித்தராமையாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சியா? மந்திரி டி.கே.சிவக்குமார் பதில்
x
தினத்தந்தி 7 May 2019 10:45 PM GMT (Updated: 7 May 2019 6:46 PM GMT)

முதல்-மந்திரி குமாரசாமியுடன் சேர்ந்து சித்தராமையாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சியா? என்பது குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.

பெங்களூரு, 

முதல்-மந்திரி குமாரசாமியுடன் சேர்ந்து சித்தராமையாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முயற்சியா? என்பது குறித்து மந்திரி டி.கே.சிவக்குமார் பதிலளித்துள்ளார்.

சித்தராமையாவை ஓரங்கட்ட முயற்சியா?

சித்தராமையா மீண்டும் முதல்-மந்திரியாக வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். அதே நேரத்தில் முதல்-மந்திரி குமாரசாமியுடன் சேர்ந்து சித்தராமையாவை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மந்திரி டி.கே.சிவக்குமார் முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து உப்பள்ளியில் நேற்று மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

எனக்கும் தலைவர்

கூட்டணி ஆட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவராக சித்தராமையா இருந்து வருகிறார். கூட்டணி ஆட்சியில் அவருக்கு எல்லா விதத்திலும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. முன்னாள் முதல்-மந்திரியாக சித்த ராமையா இருந்தாலும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தலைவர் ஆவார். அவர் எனக்கும் தலைவர் தான். அவரை எக்காரணத்தை கொண்டும் அரசியலில் இருந்து யாராலும் ஓரங்கட்ட முடியாது. சித்தராமையா தான் அடுத்த முதல்-மந்திரி என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூறி வருகின்றனர். அவரது கரத்தை பலப்படுத்தவே அவ்வாறு எம்.எல்.ஏ.க்கள் சொல்கின்றனர். அது எங்களுடைய கடமையாகும்.

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கர்நாடக அரசியலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த போவதில்லை. கூட்டணி அரசு கவிழ்ந்து விடும் என்று பா.ஜனதாவினர் கனவு காண்கிறார்கள். அவர்களது கனவு பலிக்காது. கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகளையும் நிறைவு செய்யும். இடைத்தேர்தலில் 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறுவது உறுதி. சிஞ்சோலி தொகுதி மக்கள் உமேஷ் ஜாதவுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

Next Story