பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2019 11:00 PM GMT (Updated: 7 May 2019 8:49 PM GMT)

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட துணைச் செயலாளர் அய்யப்பன் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் சந்திரகுமார், மாநில பொருளாளர் கோவிந்தராஜன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில், உரிய முன்னேற்பாடுகளை செய்து கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை போக்க வேண்டும். மின்னணு பண பரிமாற்றத்தை விரைவுபடுத்தி விவசாயிகள் விற்பனை செய்கின்ற நெல்லுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும்.

கொள்முதல் நிலையங் களில் இருந்து நிர்வாகம் உடனுக்குடன் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்தாததால் ஏற்படுகின்ற எடை இழப்பை நியாயமற்ற முறையில் கொள்முதல் பணியாளர்கள் மீது சுமத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கொள் முதல் பணியாளர்களிடம் இழப்புத்தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும்.

நிரந்தரப்படுத்தப்பட்டுள்ள கொள்முதல் பணியாளர் களுக்கு இழப்புத்தொகையை காரணம் காட்டாமல் நிபந்தனையின்றி நிரந்தர பணியில் சேர அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் தில்லைவனம், மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில செயலாளர் முருகேசன், வங்கி ஊழியர் சஙக் மாவட்ட பொதுச் செயலாளர் அன்பழகன், நிர்வாகிகள் பாலையன், தியாகராஜன், செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story