பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் விளமலில் நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
திருவாரூர் விளமல் நுகர்பொருள் வாணிப கழக மண்டல அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. நுகர்பொருள் வாணிப கழக தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நாகேஷ் தலைமை தாங்கினார்.
கொள்முதலில் உரிய முன்னேற்பாடுகள் செய்து விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை போக்கிட வேண்டும். மின்னணு பண பரிமாற்றத்தை விரைவுபடுத்தி விவசாயிகள் விற்பனை செய்கின்ற நெல்லுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் ஏற்படும் எடை இழப்பை கொள்முதல் பணியாளர்கள் மீது சுமத்த கூடாது. அதற்கான இழப்பீடு தொகை வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் புண்ணீஸ்வரன், சங்கத்தின் மாநில இணை பொதுச்செயலாளர் குணசேகரன், சங்க நிர்வாகிகள் வேலாயுதம், விஜயகுமார், ராஜசேகர், ரமேஷ், ஜி.வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story