கொள்முதல் நிலையங்களில் நெல் எடை இழப்பை பணியாளர்களிடம் ஈடு செய்வதை கைவிடக்கோரி ஆர்ப்பாட்டம் - நாகையில் நடந்தது
கொள்முதல் நிலையங்களில் நெல் எடை இழப்பை பணியாளர்களிடம் ஈடு செய்வதை கைவிடக்கோரி நாகையில் டி.என்.சி.எஸ்.சி. தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாகப்பட்டினம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நாகை மண்டல அலுவலகம் முன்பு டி.என்.சி. எஸ்.சி. தொழிலாளர் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க மாவ ட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாநில துை- ண தலைவர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணை தலைவர் ராஜ்மோகன், மாநில செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஏ.ஐ.டி. யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன், மாவட்ட பொருளாளர் மகேந்திரன், விவசாய சங்க மாநில குழு உறுப்பினர் சரபோஜி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நெல் கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படுகிற இடர்பாடுகளை போக்க வேண்டும். மின்னணு பணபரிமாற்றத்தை விரைவுபடுத்தி விவசாயிகள் விற்பனை செய்கின்ற நெல்லுக்கு உடனுக்குடன் பண பட்டுவாடா செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் இருந்து சேமிப்பு நிலையங்களுக்கு நெல் மூட்டைகள் உடனுக்குடன் எடுத்து செல்லப்படாததால் ஏற்படுகின்ற எடை இழப்பை கொள்முதல் நிலைய பணியாளர்களிடம் இருந்து ஈடு செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
Related Tags :
Next Story