மெட்ரோ ரெயில் பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எம்.எம்.ஆர்.டி.ஏ. தகவல்
மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக எம்.எம்.ஆர்.டி.ஏ. தெரிவித்து உள்ளது.
மும்பை,
மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் நடக்கும் இடங்களில் மழைநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளதாக எம்.எம்.ஆர்.டி.ஏ. தெரிவித்து உள்ளது.
பருவமழை
மும்பையில் அடுத்த மாதம்(ஜூன்) பருவமழை தொடங்குகிறது. மழைக்காலத்தின் போது, நகரில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க நகரில் உள்ள சிறிய மற்றும் பெரிய சாக்கடை கால்வாய்கள் தூர்வாரும் பணி மாநகராட்சி சார்பில் நடந்து வருகிறது. தாழ்வான இடங்களில் தேங்கும் தண்ணீர் மோட்டார் பம்புகள் மூலம் உறிஞ்சி வெளியேற்றப்படும்.
மும்பையில் பல்வேறு இடங்களில் மெட்ரோ ரெயில் வழித்தடங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு உள்ளன.
30 மோட்டார் பம்புகள்
எனவே மழையின் போது மெட்ரோ ரெயில் வழித்தட பணிகள் நடைபெறும் இடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம்(எம்.எம்.ஆர்.டி.ஏ.) நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது. இதற்காக தகிசர்- டி.என்.நகர் வழித்தடம் (மெட்ரோ2ஏ), டி.என்.நகர்- மான்கூர்டு(மெட்ரோ 2பி), வடலா- காசர்வடவலி(மெட்ரோ4), சுவாமி சமர்த் நகர்- விக்ரோலி (மெட்ரோ6), அந்தேரி கிழக்கு- தகிசர் கிழக்கு(மெட்ரோ7) வழித்தடங்களில் தண்ணீர் தேங்குவதை தடுக்க 75 என்ஜினீயர்கள் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
பள்ளங்களில் தேங்கும் மழைநீரை அகற்றும் பணியில் 150 தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 30 மோட்டார் பம்புகளும் வைக்கப்படும் என எம்.எம்.ஆர்.டி.ஏ. தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story