வானவில் : வெளிநாட்டுப் பயணிகளுக்கு உதவும் மொழிபெயர்ப்பு கருவி
வெளிநாட்டுப் பயணிகள் அதிகம் கூடுமிடங்களில், திடீரென அவர்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போய்விட்டால் மொழிப் பிரச்சினையால் அவர்கள் அவதி பட நேரிடும். நோயைப் பற்றி மருத்துவரிடம் சரியாக விவரிக்க இயலாமல் சிரமப்படுவார்கள்.
ஜப்பானை சேர்ந்த பியூஜிட்சு ( FUJITSU ) நிறுவனம் இதற்கு ஒரு அருமையான தீர்வை வழங்கியுள்ளது. உடையின் மீது அணிந்து கொள்ள கூடிய ஒரு கருவியை கண்டுபிடித்துள்ளது அந்த நிறுவனம்.
கைகளின் உபயோகமின்றி ( HANDS FREE ) இயங்கும் இந்த கருவியை மருத்துவர் சட்டையில் அணிந்து கொண்டால் நோயாளி பேசப் பேச அது மொழிபெயர்ப்பு செய்யும்.தொண்ணூற்று ஐந்து சதவீதம் வரை துல்லியமாக மொழி பெயர்க்கும். உலகின் பெரும்பாலான மொழிகளை இதனைக் கொண்டு மொழிமாற்றம் செய்யலாம். கைகளில் பிடித்து கொள்ள தேவையில்லை என்பதால், மருத்துவர் சிகிச்சை மேற்கொள்ளும் போதே இதை அணிந்து கொள்ளலாம்.
சுற்றுப்புற இரைச்சல் இன்றி தெளிவாக இயங்குகிறது இந்த உடனடி டிரான்ஸ்லேடர் கருவி. இது தற்போது ஜப்பானில் இருக்கும் சில மருத்துவமனைகளில் உபயோகத்திற்கும் வந்து விட்டது. கூடிய விரைவில் உலகெங்கும் இருக்கும் சுற்றுலா மையங்களில் இருக்கும் மருத்துவமனைகளில் இக்கருவியை பார்க்கலாம்.
Related Tags :
Next Story