வானவில் : ரூ.4.5 லட்சம் விலையில் சோனியின் 75 அங்குல டி.வி.
டி.வி. உள்ளிட்ட வீட்டு உபயோக மின்னணு பொருள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஜப்பானின் சோனி நிறுவனம் 75 அங்குல ஸ்மார்ட் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.
4 கே ஹெச்.டி.ஆர். ஆண்ட்ராய்டு டி.வி.யாக வந்துள்ள இது எக்ஸ் 9500 ஜி சீரிஸ் வகையைச் சேர்ந்ததாகும். இது சோனி கே.டி. 75 எக்ஸ் 9500 ஜி என்ற பெயரில் வந்துள்ளது. இது கூகுள் அசிஸ்டென்ட் உதவியில் செயல்படக் கூடியது. இதில் எக்ஸ் 1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர் உள்ளது.
இதில் பின்புறம் பேக் லைட் போதிய அளவு உள்ளதால், அல்ட்ரா வைட் வியூயிங் ஆங்கிள் உள்ளது. நெட்பிளிக்ஸ் மூலம் படங்களைப் பார்க்கும் வசதியும் உள்ளது. ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் உள்ளது. 16 ஜி.பி. நினைவகம், புளூடூத் வி 4.2 இணைப்பு வசதி உள்ளது. இதன் பிரேம்கள் கருப்பு நிறத்திலும் ஸ்டாண்ட் சில்வர் வண்ணத்திலும் உள்ளது. இதில் உள்ள எக்ஸ் 1 அல்டிமேட் பிக்சர் பிராசஸர் ஒவ்வொரு படத்தின் வண்ணத்தை பகுப்பாய்வு செய்து மிகத் துல்லியமான படங்கள் வெளிப்பட உதவும். இதனால் தத்ரூபமான படங்களை இதன் மூலம் பார்க்க முடியும். இதில் உள்ள வைட் ஆங்கிள் தொழில் நுட்பமானது டி.வி.யில் வண்ண மாற்றங்களை எந்த முனையில் இருந்து பார்த்தாலும் துல்லியமாக தெரிய வகை செய்கிறது. நெட்பிளிக்ஸ் இணைப்பு வசதி செயல்பாடு கொண்டிருப்பதால் அதில் வெளியாகும் படங்களை ஒரிஜினல் தரத்தோடு பார்த்து ரசிக்க முடியும். இதன் பின் பகுதியில் சவுண்ட் ட்வீட்டர்ஸ் உள்ளது.
இதில் டால்பி அட்மோஸ் (பில்ட்இன்) வசதியோடு வந்துள்ளது. இது கூகுள் அசிஸ்டென்ட் உதவியிலும் செயல்படக் கூடியது. இதில் பில்ட் இன் மைக்ரோபோன் உள்ளது. காட்சிகளை துல்லியமாக பார்த்து ரசிக்க இந்த டி.வி. நிச்சயம் உதவும்.
Related Tags :
Next Story