உடன்குடி அருகே பரிதாபம் பள்ளிக்கூட ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை திருவிழாவிற்கு புது துணி வாங்கி தராததால் விபரீத முடிவு
உடன்குடி அருகே கோவில் திருவிழாவிற்கு தாயார் புது துணி வாங்கி தராததால் பள்ளிக்கூட ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மெஞ்ஞானபுரம்,
உடன்குடி அருகே கோவில் திருவிழாவிற்கு தாயார் புது துணி வாங்கி தராததால் பள்ளிக்கூட ஆசிரியை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பள்ளிக்கூட ஆசிரியை
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள நாராயணபுரம் கொட்டங்காடை சேர்ந்தவர் ராமலிங்கம். இவருடைய மகள் சிவரஞ்சனி (வயது 27). இவர் உடன்குடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் இவருடைய ஊரில் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. எனவே சிவரஞ்சனி தனது தாய் சிவகலாவிடம் தனக்கு புது துணி வேண்டும் என்று கேட்டு வந்துள்ளார். ஆனால் சிவகலா அவருக்கு புது துணி எடுத்து கொடுக்காமல் காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது. இதனால் சிவரஞ்சனி மனமுடைந்து காணப்பட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சனி தனது அறைக்கு தூங்க சென்றார். பின்னர் நேற்று காலை நீண்ட நேரமாகியும் அறையின் கதவு திறக்கப்படவில்லை. இதில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் சிவரஞ்சனியை அழைத்தனர்.
ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. இதில் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவருடைய பிணத்தை கைப்பற்றி பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story