பரமத்தி வேலூர் அருகே விபத்தில் கல்லூரி ஊழியர் பலி


பரமத்தி வேலூர் அருகே விபத்தில் கல்லூரி ஊழியர் பலி
x
தினத்தந்தி 9 May 2019 3:30 AM IST (Updated: 9 May 2019 1:07 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் அருகே விபத்தில் தனியார் கல்லூரி ஊழியர் பலியானார்.

பரமத்தி வேலூர், 

பரமத்தி வேலூர் அருகே உள்ள கீழ் சாத்தம்பூரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் மணிவண்ணன் (வயது 31). இவர் நாமக்கல் அருகே உள்ள ஒரு தனியார் போக்குவரத்து கல்லூரியில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவர் பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அப்போது கரூர் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, இவருக்கு பின்னால் வந்த ஒரு அடையாளம் தெரியாத வாகனம் இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த மணிவண்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து அக்கம், பக்கத்தினர் உடனடியாக பரமத்தி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த மணிவண்ணனுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது. அவருக்கு நித்யா (28) என்ற மனைவி உள்ளார். அவர் தற்போது கர்ப்பமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story