மோட்டார் சைக்கிள் மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி


மோட்டார் சைக்கிள் மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 9 May 2019 4:15 AM IST (Updated: 9 May 2019 1:27 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மோதி சுமைதூக்கும் தொழிலாளி பலியானார்.

குள்ளனம்பட்டி,

திண்டுக்கல் அருகே உள்ள பெரியபள்ளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 48). சுமைதூக்கும் தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு இவர் பெரியபள்ளபட்டி சாலையில் நடந்து சென்றார். அப்போது, திண்டுக்கல் மேட்டுப்பட்டியை சேர்ந்த ஆனந்தகுமார் (30) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் அரசப்பன் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அரசப்பனை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story