பிளஸ்-1 பொதுத்தேர்வில் 94.89 சதவீதம் பேர் தேர்ச்சி
பிளஸ்-1 பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 94.89 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர்.
புதுக்கோட்டை,
தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதத்தில் பிளஸ்-1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 8 ஆயிரத்து 275 மாணவர்களும், 10 ஆயிரத்து 520 மாணவிகளும் என மொத்தம் 18 ஆயிரத்து 795 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 7 ஆயிரத்து 641 மாணவர்களும், 10 ஆயிரத்து 194 மாணவிகளும் என மொத்தம் 17 ஆயிரத்து 835 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 94.89 சதவீதம் ஆகும்.
பிளஸ்-1 பொதுத்தேர்வை புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 7 ஆயிரத்து 202 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 6 ஆயிரத்து 824 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.75 சதவீதம் ஆகும். அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 6 ஆயிரத்து 365 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 10 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 94.42 சதவீதம் ஆகும். மேலும் இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 228 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இதில் 5 ஆயிரத்து 1 மாணவ- மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இது 95.66 சதவீதம் ஆகும்.
தேர்வு முடிவுகள் வெளியானதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி விவரம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. இருப்பினும் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டதால் மாணவ-மாணவிகள் தங்களின் மதிப்பெண்களை அதன் மூலமே தெரிந்து கொண்டதால் பள்ளிக்கு வந்து மதிப்பெண்ணை பார்க்க வந்தவர்கள் மிக குறைவாகவே இருந்தனர். இதனால் பள்ளி வளாகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன.
Related Tags :
Next Story