கொரடாச்சேரி அருகே பரிதாபம், மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி
கொரடாச்சேரி அருகே மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கொரடாச்சேரி,
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள மூங்கில்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது55). இவர் விவசாய தொழிலாளி. சம்பவத்தன்று இவர் கொரடாச்சேரி அருகே உள்ள ஆர்ப்பாவூர் கிராமத்தை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான புளியமரத்தில் ஏறி புளியம்பழம் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து அவர் தவறி கீழே விழுந்துவிட்டார். இதில் படுகாயம் அடைந்த செல்வராஜை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி ராணி கொரடாச்சேரி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் உத்திராபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மரத்தில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி ஒருவர் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story