ஒரே ஆண்டில் புதுச்சேரி நகராட்சி சார்பில் ரூ.16 கோடி வரி வசூல்
ஒரே ஆண்டில் புதுவை நகராட்சி சார்பில் ரூ.16 கோடி வரி வசூல் செய்யப்பட்டு உள்ளது.
புதுச்சேரி,
புதுவை நகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி நகராட்சியானது 2018-19ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு 42 வார்டுகளில் உள்ள வீடுகள், கட்டிடங்களுக்கான சொத்து வரியை பொதுமக்கள் சிரமமின்றி எளிதில் செலுத்துவதற்கு ஏதுவாக பல்வேறு இடங்களில் மார்ச் மாதம் முழுவதும் விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வரிவசூல் சிறப்பு முகாம் நடத்தியது.
இது தவிர பொதுமக்களுக்கு சொத்துவரி செலுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமும் நகராட்சி வாகனங்களில் ஒலிபெருக்கி மூலம் செய்யப்பட்டது. அத்துடன் நகராட்சி அலுவலர்களை கொண்ட சிறப்பு குழு சொத்துவரி நிலுவைதாரர்களை நேரில் சந்தித்து வரி செலுத்த வற்புறுத்தியது. இந்த நடவடிக்கைகளின் பயனாக முன் எப்போதும் இல்லாத அளவுக்கு மார்ச் மாதம் மட்டும் சொத்து வரியாக ரூ.1 கோடியே 98 லட்சத்து 3 ஆயிரத்து 689 வசூலானது.
மேலும் 2018-19ம் ஆண்டிற்கான சொத்துவரி உள்ளிட்ட இதர வரிகளான காலிமனை வரி, சினிமா, கேபிள் டி.வி. கேளிக்கை வரி மற்றும் சாலை அபிவிருத்தி கட்டணம் ஆகியவைகளையும் நகராட்சி முனைப்புடன் செயலாற்றி கணிசமான அளவில் வசூல் செய்துள்ளது. சொத்து வரி, வீட்டு வரியாக ரூ.9 கோடியே 12 லட்சம், கேளிக்கை வரியாக ரூ.4 கோடியே 96 லட்சம், காலிமனை வரியாக ரூ.1 கோடியே 37 லட்சத்து 85 ஆயிரம், சாலை அபிவிருத்தி கட்டணமாக ரூ.89 லட்சத்து 55 ஆயிரம் என ஒட்டுமொத்தமாக ரூ.16 கோடியே 36 லட்சத்து 45 ஆயிரம் வசூலிக்கப்பட்டுள்ளது.
சொத்து வரி, சுய வரிவிதிப்பு முறையில் செய்யப்படுவதாலும் 5 ஆண்டிற்கு ஒருமுறை சீராய்வு செய்யத்தக்க வரி என்பதாலும் பொதுமக்கள் வரிகேட்பு அறிக்கையை எதிர்பார்க்காமல் செலுத்த வேண்டும். சொத்துவரி என்பது சட்டப்படியாக நிதியாண்டின் தொடக்கத்தில் 15 தினங் களுக்கு முன்னதாகவே செலுத்தத்தக்க வரியாகும். அவ்வாறு செலுத்தாவிட்டால் அந்த வரி தொகையை நிலுவை தொகையாக கருதி அதன் மீது வட்டி விதிப்பதற்கும், ஜப்தி நடவடிக்கை எடுப்பதற்கும் நகராட்சி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story