கடையின் சுவரில் துளை போட்டு ரூ.17 லட்சம் செல்போன்கள் கொள்ளை 3 பேருக்கு வலைவீச்சு


கடையின் சுவரில் துளை போட்டு ரூ.17 லட்சம் செல்போன்கள் கொள்ளை 3 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 9 May 2019 4:00 AM IST (Updated: 9 May 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

கடையின் சுவரில் துளை போட்டு ரூ.17 லட்சம் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்பர்நாத், 

கடையின் சுவரில் துளை போட்டு ரூ.17 லட்சம் செல்போன்களை கொள்ளையடித்துச் சென்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செல்போன்கள் கொள்ளை

தானே மாவட்டம் கல்யாணில் உள்ள செல்போன் கடையை திறப்பதற்காக நேற்று முன்தினம் காலை அதன் உரிமையாளர் வந்தார். அவர் கடையை திறந்து உள்ளே சென்ற போது, அங்கிருந்த செல்போன்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன. மேலும் கடை சுவரில் பெரிய துளை ஒன்றும் இருந்தது.

இதை பார்த்து கடை உரிமையாளர் அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவு நேரத்தில் கடைக்குள் கொள்ளை கும்பல் சுவரில் துளை போட்டு புகுந்து கடையில் இருந்த செல்போன்களை கொள்ளையடித்து சென்றிருந்தது தெரியவந்தது.

3 பேருக்கு வலைவீச்சு

கொள்ளை போன செல்போன்களின் மதிப்பு ரூ.17 லட்சம் ஆகும். சம்பவம் குறித்து கடை உரிமையாளர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கடையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தனர். இதில் 3 பேர் கொண்ட கொள்ளை கும்பல் கடை சுவரில் துளை போட்டு உள்ளே புகுந்து செல்போன்களை அள்ளிச் சென்ற காட்சி பதிவாகியிருந்தது.

சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்கள் 3 பேரையும் வலைவீசி தேடிவருகின்றனர்.

Next Story