தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. வீடு, வீடாக வாக்கு சேகரிப்பு
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.
கனிமொழி எம்.பி. பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக சண்முகையா போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க. மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. நேற்று காலை பிரசாரம் செய்தார்.
அவர் தூத்துக்குடி அன்னை இந்திரா நகர் விநாயகர் கோவில் முன்பு இருந்து பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து அய்யப்பன்நகர், விசுவபுரம் ஆகிய பகுதிகளில் வீடு, வீடாக நடந்து சென்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.
அடிப்படை வசதிகள்
அப்போது குடிநீர், சாலை, மின்விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
பிரசாரத்தில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாணவர் அணி பாலகுருசாமி, தொண்டர் அணி ரமேஷ், மகளிர் அணி கஸ்தூரிதங்கம், இளைஞர் அணி மதியழகன், மாநகர துணை செயலாளர் கீதாமுருகேசன், அவைத்தலைவர் ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் காசிவிசுவநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story