இன்று மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு


இன்று மதுக்கடைகள் மூடல் கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 9 May 2019 9:30 PM GMT (Updated: 9 May 2019 6:57 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) மதுக்கடைகளை மூட மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

வீரசக்கதேவி ஆலய விழா

ஓட்டப்பிடாரம் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையில் வீரசக்கதேவி ஆலய விழா இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் (சனிக்கிழமை) நடக்கிறது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்களை பொதுமக்கள் நலன் கருதியும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை கருத்தில் கொண்டும் இன்று (வெள்ளிக்கிழமை) மட்டும் மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

நடவடிக்கை

அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்க சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story