கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்


கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள்
x
தினத்தந்தி 10 May 2019 4:00 AM IST (Updated: 10 May 2019 1:52 AM IST)
t-max-icont-min-icon

கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று கடைசி நாள் ஆகும்.

பெரம்பலூர், 

பெரம்பலூர் மாவட்டம் கீழக்கணவாயில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 2019-20-ம் கல்வியாண்டிற்கு முதலாமாண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 வருட பட்டயப்படிப்பில் சேர எஸ்.எஸ்.எல்.சி.யில் தேர்ச்சி பெற்ற மாணவ-மாணவிகளும், நேரடி 2-ம் ஆண்டிற்கான பட்டயப்படிப்பில் சேர ஐ.டி.ஐ.யில் உரிய பிரிவில் பயின்று தேர்ச்சி அல்லது பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம். அமைப்பியல் துறை (சிவில்), எந்திரவியல் துறை (மெக்கானிக்கல்), மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை, மின்னியல் மற்றும் மின்னணுவியல், கணிப்பொறியியல் துறை உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு மூலமாக சேர்க்கை நடைபெற உள்ளது.

இதற்கான விண்ணப்ப கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ- மாணவிகள் தங்களது சுய சான்றொப்பமிட்ட சாதி சான்றிதழ் நகல்களை சமர்ப்பித்து விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சமர்ப்பிக்க வேண்டும். நேரடி 2-ம் ஆண்டு முழு நேர கலந்தாய்வு சேர்க்கை வருகிற 21-ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு 04328-243200 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

இதேபோல் கீழப்பழுவூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2-ம் ஆண்டிற்கான மாணவ-மாணவிகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. நேரடி 2-ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு வருகிற 22-ந்தேதியும், முதலாமாண்டு கலந்தாய்வு வருகிற 29-ந்தேதியும் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

இந்த தகவல் பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story