சிதம்பரத்தில், கார்-மொபட் மோதல், செவிலியர் பலி


சிதம்பரத்தில், கார்-மொபட் மோதல், செவிலியர் பலி
x
தினத்தந்தி 10 May 2019 4:30 AM IST (Updated: 10 May 2019 2:59 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரத்தில் கார்- மொபட் மோதிய விபத்தில் செவிலியர் பலியானார்.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள கூத்தங்கோவில் வடக்குத்தெருவை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகள் தமிழ்செல்வி(வயது 23). இவர், சிதம்பரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் பணி முடிந்ததும் தமிழ்செல்வி, தனது மொபட்டில் வீட்டிற்கு புறப்பட்டார். கூத்தங்கோவில் புறவழிச்சாலையில் சென்றபோது, எதிரே வந்த கார் அவரது மொபட் மீது மோதியது. இதில் தமிழ்செல்வி தூக்கி வீசப்பட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் பரிசோதனை செய்து, ஏற்கனவே தமிழ்செல்வி இறந்துவிட்டதாக கூறினர்.

இதனிடையே விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அண்ணாமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, விபத்துக்குள்ளான மொபட்டையும், காரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேலும் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார், தமிழ்செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள பிணவறையில் வைத்தனர். விபத்து குறித்து தனபால் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story