தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வந்த 15 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ‘சீல்' தானே மாநகராட்சி அதிரடி நடவடிக்கை


தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வந்த 15 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு ‘சீல் தானே மாநகராட்சி அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 9 May 2019 10:30 PM GMT (Updated: 2019-05-10T03:11:34+05:30)

தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வந்த 15 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சீல் வைத்து தானே மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

தானே,

தீ தடுப்பு சாதனம் இன்றி இயங்கி வந்த 15 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சீல் வைத்து தானே மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது.

அதிரடி சோதனை

தீ தடுப்பு சாதனம் மற்றும் முறையான சான்றிதழ் இன்றி இயங்கி வரும் கேளிக்கை விடுதிகள், ஓட்டல்கள், ஆஸ்பத்திரிகளை இழுத்து மூடி சீல் வைக்கும்படி மும்பை ஐகோர்ட்டு அண்மையில் தானே மாநகராட்சிக்கு உத்தரவிட்டு இருந்தது.

இந்த உத்தரவின் படி தானே மாநகராட்சி அதிகாரிகள், சுகாதாரத்துறை மற்றும் தீயணைப்பு படை அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்து கடந்த 1-ந் தேதி தானேயில் உள்ள ஆஸ்பத்திரிகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், உரிய தீ தடுப்பு சாதனம் இல்லாமல் தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த ஆஸ்பத்திரிகள் இழுத்து மூடி சீல் வைக்கப்பட்டது.

15 ஆஸ்பத்திரிக்கு சீல்

இது தொடர்பாக தானே மாநகராட்சி சீனியர் அதிகாரி சசிகாந்த் காலே தெரிவிக்கையில், ‘‘ஏற்கனவே மும்பை ஐகோர்ட்டு உத்தரவின் படி அனைத்து இடங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு எச்சரிக்கை செய்து இருந்தோம்.

ஆனால் அதை பொருட்படுத்தாமல் தற்போது வாக்ளே எஸ்டேட், பால்கும், நவுபாடா, கல்வா, மும்ரா போன்ற இடங்களில் தீத்தடுப்பு சாதனம் இன்றி 15 தனியார் ஆஸ்பத்திரிகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த 15 தனியார் ஆஸ்பத்திரிகளுக்கும் சீல் வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளோம்’’ என்றார்.

Next Story