மொபட்-பஸ் மோதல்; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


மொபட்-பஸ் மோதல்; கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 11 May 2019 3:30 AM IST (Updated: 10 May 2019 10:41 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரம் அருகே மொபட்- பஸ் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.

சென்னை,

காஞ்சீபுரத்தை அடுத்த படுநெல்லி கிராமத்தை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). மணியாச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (22). சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் பாலாஜி (21) இவர்கள் 3 பேரும் காஞ்சீபுரத்தை அடுத்த ஏனாத்தூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்.சி. படித்து வந்தனர்.

நேற்று காலை ஒரே மொபட்டில், இவர்கள் 3 பேரும் படுநெல்லி கிராமத்தில் இருந்து காஞ்சீபுரத்திற்கு, வந்து கொண் டிருந்தனர். மொபட்டை ரவிக்குமார் ஓட்டி சென்றார். காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாக்கம் என்ற இடத்தில் செல்லும்போது மொபட்டும், அந்த வழியாக வந்த தனியார் பஸ்சும் நேருக்கு நேர் மோதி கொண்டன.

இதில், ரவிக்குமார் வெங்கடேசன் ஆகியோர் அதே இடத் தில் பரிதாபமாக உயிரிழந்தனர். பாலாஜி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விபத்தில், பலியான கல்லூரி மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக, காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது. இதுகுறித்து காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மூர்த்தி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story