ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கு பயிற்சி கலெக்டர் தலைமையில் நடந்தது
வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓட்டுகள் அனைத்தும் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட உள்ளது.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் நாடாளுமன்ற தொகுதி மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு எந்திரங்கள் காஞ்சீபுரம் அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியிலும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தண்டலம் ராஜலட்சுமி என்ஜினீயரிங் கல்லூரியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓட்டுகள் அனைத்தும் வருகிற 23-ந்தேதி எண்ணப்பட உள்ளது. இந்த பணி தொடர்பாக அனைத்து வாக்கு எண்ணும் அலுவலர்களுக்கும் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான பொன்னையா தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி ஸ்ரீதர், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) நாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), அமீதுல்லா, உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story