செல்போன் தகராறில் திராவகம் ஊற்றி தம்பதியை கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை பால்கர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


செல்போன் தகராறில் திராவகம் ஊற்றி தம்பதியை கொன்ற தொழிலாளிக்கு தூக்கு தண்டனை பால்கர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 3:59 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் தகராறில் திராவகம் ஊற்றி தம்பதியை கொலை செய்த தொழிலாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி பால்கர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

வசாய்,

செல்போன் தகராறில் திராவகம் ஊற்றி தம்பதியை கொலை செய்த தொழிலாளிக்கு தூக்கு தண்டனை வழங்கி பால்கர் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியது.

செல்போன் திருட்டு

பால்கர் மாவட்டம், பொய்சர் எம்.ஐ.டி.சி. பகுதியில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தவர் ராஜ்குமார் (வயது35). இவருடன் குட்டு கிரிஷ் (28) என்ற வாலிபரும் வேலை பார்த்து வந்தார்.

இந்தநிலையில், கடந்த 2015-ம் ஆண்டு குட்டு கிரிஷ், ராஜ்குமாரின் செல்போனை திருடினார். இதுகுறித்து ராஜ்குமார் தொழிற்சாலை உரிமையாளரிடம் புகார் அளித்தார்.

தொழிற்சாலை உரிமையாளர் குட்டு கிரிசை கண்டித்தார். மேலும் திருடிய செல்போனை திரும்ப கொடுக்குமாறு சத்தம் போட்டார். இது அவருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

திராவகம் ஊற்றி கொலை

அந்த ஆண்டு நவம்பர் 6-ந் தேதி அதிகாலை 2.30 மணியளவில் குட்டு கிரிஷ், ராஜ்குமாரின் வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது வீட்டுக்குள் ராஜ்குமாரும், அவரது மனைவி கீதாவும் (30) அயர்ந்து தூங்கி கொண்டு இருந்தனர்.

அப்போது குட்டு கிரிஷ் வாளியில் எடுத்து சென்று இருந்த 10 லிட்டர் கந்தக திராவகத்தை தம்பதி மீது ஊற்றினார். மேலும், ‘உனது செல்போனை வைத்து கொள்' என ஆவேசமாக கூறி செல்போனை ராஜ்குமார் மீது வீசிவிட்டு தப்பினார்.

இந்தநிலையில் தம்பதியினர் உடல் வெந்து வலியால் அலறி துடித்தனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் தம்பதியை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். இதில் ராஜ்குமாரும், அவரது மனைவி கீதாவும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தனர்.

தூக்கு தண்டனை

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பீகார் மாநிலம் பாட்னாவுக்கு தப்பி சென்ற குட்டு கிரிசை பிடித்து கைது செய்தனர். பின்னர் அவர் தானே மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

தம்பதி கொலை வழக்கு தொடர்பான விசாரணை பால்கர் செசன்ஸ் கோர்ட்டில் நடந்து வந்தது. அப்போது 12 பேர் தொழிலாளி குட்டு கிரிசுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

இதையடுத்து கோர்ட்டு, ஈவு இரக்கமின்றி தம்பதியை கொலை செய்த தொழிலாளி குட்டு கிரிசுக்கு தூக்கு தண்டனை வழங்கி பரபரப்பு தீர்ப்பை வழங்கியது.

இது அரிதிலும் அரிதான வழக்கு என்பதால் குற்றவாளிக்கு அதிகப்படியான தண்டனை விதித்து இருப்பதாக நீதிபதி தனது தீர்ப்பில் கூறினார்.

Next Story