ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணிக்கு 1,000 அலுவலர்கள் நியமனம்; கலெக்டர் சி.கதிரவன் தகவல்
ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை பணிக்கு 1,000 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறினார்.
ஈரோடு,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த மாதம் 18-ந் தேதி நடந்து முடிந்தது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் முடிந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சித்தோடு அருகே உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணியில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான சி.கதிரவன் கூறியதாவது:-
ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்காக ஓட்டு எண்ணிக்கை வருகிற 23-ந் தேதி நடைபெறுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டு உள்ள ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மத்திய பாதுகாப்பு படையினர், ராணுவ வீரர்கள், போலீசார் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓட்டு எண்ணிக்கையின்போது ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 14 மேஜைகளில் தலா 16 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதேபோல் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள். மேலும், வாக்குச்சாவடி அலுவலர்கள் 5 பேர், தபால் ஓட்டு எண்ணிக்கைக்கான அலுவலர்கள், தேர்தல் அதிகாரிகள் 3 பேர் என சுமார் 1,000 அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இந்த அலுவலர்களுக்கு வருகிற 17-ந் தேதி முதல் கட்ட பயிற்சி அளிக்கப்படும். அதன்பிறகு மீண்டும் ஒருமுறை பயிற்சி கொடுக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். அரசியல் கட்சி முகவர்களுக்கு நுழைவு பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது. சுமார் 1½ கிலோ மீட்டர் முன்னதாக வாகனங்களை நிறுத்திவிட வேண்டும். அங்கிருந்து வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு அழைத்து செல்ல பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும். ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 5 வாக்குச்சாவடிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்து விவிபேட் கருவியில் பதிவான ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். பின்னர் ஒப்புகை சீட்டுகளின் எண்ணிக்கையும், மின்னணு வாக்குப்பதிவில் பதிவான வாக்குகளையும் சரிபார்த்து தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
இவ்வாறு மாவட்ட கலெக்டர் கதிரவன் கூறினார்.

Related Tags :
Next Story