ஈரோட்டில் பரபரப்பு; விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த பூக்கடைக்காரர், அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை


ஈரோட்டில் பரபரப்பு; விஷம் குடித்துவிட்டு போலீஸ் நிலையத்துக்கு வந்த பூக்கடைக்காரர், அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 4:00 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக விஷத்தை குடித்துவிட்டு வந்த பூக்கடைக்காரர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு,

ஈரோடு வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் ஷேக்முகமது யூசப் (வயது 38). இவர் பெரியார் நகரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி ராபீயா (33). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுகுறித்து ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ராபீயா நேற்று புகார் கொடுத்தார். அதன்பேரில் கணவன், மனைவி 2 பேரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில், ஷேக்முகமது யூசப் தனது மனைவியை வீட்டுக்கு அழைத்து செல்வதாக கூறியுள்ளார். ஆனால் அதற்கு ராபீயா மறுப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து ஷேக்முகமது யூசப் வெளியே சென்றார். அதன்பின்னர் மீண்டும் அவர் போலீஸ் நிலையத்துக்கு வந்தார். அப்போது அவர் மயக்க நிலையில் இருந்துள்ளார். இதனால் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, தற்கொலை செய்வதற்காக விஷத்தை குடித்துவிட்டதாக தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ஷேக்முகமது யூசப்பை மீட்டு உடனடியாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக வந்த பூக்கடைக்காரர் விஷம் குடித்து இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story