குடிநீர் வழங்கக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை
வத்திராயிருப்பு அருகே மகாராஜாபுரம் ஊராட்சியில் முறையான குடிநீர் வழங்கப்படாததை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ளது மகாராஜாபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் உள்ள 6-வது வார்டுக்கு கடந்த 1½ மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதையொட்டி அவர்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
இதையடுத்து ஏராளமான ஆண்கள், பெண்கள் காலி குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், மகாராஜபுரம் ஊராட்சியில் கடந்த 1½ மாதங்களாக குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் அத்தியாவசியத்திற்காக கூட தண்ணீர் கிடைப்பது அரிதாகிவிட்டது.
மேலும் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் முறையாக குடிநீர் வழங்கக்கோரி மனு செய்தும் பயனில்லை. எனவே குடிநீர் பிரச்சினைக்காக தீர்வு காணவே நாங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டோம். மேலும் எங்கள் பகுதியில் கழிவறை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று குற்றம் சாட்டினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார், சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் பேசி அடிப்படை வசதிகளை செய்து தர உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் கூறியதை தொடர்ந்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story