குறிஞ்சிப்பாடி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - ஆசிரியர் சாவு


குறிஞ்சிப்பாடி அருகே, மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல் - ஆசிரியர் சாவு
x
தினத்தந்தி 11 May 2019 3:45 AM IST (Updated: 11 May 2019 5:24 AM IST)
t-max-icont-min-icon

குறிஞ்சிப்பாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி, ஆசிரியர் ஒருவர் உயிரிழந்தார்.

குறிஞ்சிப்பாடி,

நெய்வேலி இந்திரா நகரில் உள்ள சக்தி நகரை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அபிலாஷ் ராஜசேகர் (வயது 35). மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது மோட்டார் சைக்கிளில் ஒரத்தூரை சேர்ந்த உறவினர் தமிழழகன்(41) என்பவருடன் கடலூரில் இருந்து மந்தாரக்குப்பத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது குறிஞ்சிப்பாடி அருகே பெத்தநாயக்கன் குப்பம் என்கிற இடத்தில் வந்த போது, எதிரே வந்த கார் இவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் அபிலாஷ் ராஜசேகர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த தமிழழகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story