செய்யாறு அருகே விவசாயி மர்மச்சாவு கொலையா? போலீஸ் விசாரணை


செய்யாறு அருகே விவசாயி மர்மச்சாவு கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 12 May 2019 4:45 AM IST (Updated: 11 May 2019 10:25 PM IST)
t-max-icont-min-icon

செய்யாறு அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு, 

செய்யாறு தாலுகா நெங்கல் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 33), விவசாயி. இவர் உத்திரமேரூர் பகுதியை சேர்ந்த நண்பர்கள் சத்யராஜ், உதயகுமார் ஆகியோருடன் தன்னுடைய நிலத்துக்கு நீர் பாசனம் செய்ய சென்றார்.

நிலத்துக்கு சென்ற நரசிம்மன் வெகுநேரமாகியும் வீட்டிற்கு வராததால் நரசிம்மனின் மனைவி திவ்யா மற்றும் உறவினர்கள் நிலத்துக்கு சென்றனர். அப்போது சத்யராஜ், உதயகுமார் ஆகியோர் காயங்களுடன் கிணற்றில் விழுந்து கிடந்தனர். அவர்களை மீட்டு செய்யாறு அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

தொடர்ந்து நரசிம்மனை உறவினர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். அப்போது காயங்களுடன் நரசிம்மன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த அனக்காவூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்ஜெயக்குமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நரசிம்மன் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்து கிணற்றில் தள்ளி விட்டார்களா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story