திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்


திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம்
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ரூ.1½ கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

திருச்செங்கோடு, 

நாமக்கல் மவட்டம் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் தலைமை அலுவலகமான திருச்செங்கோட்டில் சனிக்கிழமை தோறும் மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று நடைபெற்ற ஏலத்தில் நாமக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4 ஆயிரம் மூட்டைகள் மஞ்சளை விவசாயிகள் ஏலத்திற்கு கொண்டு வந்தனர்.

இந்த ஏலத்தில் ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்ட வியாபாரிகள் கலந்து கொண்டு மஞ்சளை ஏலம் எடுத்தனர்.

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச விலையாக ரூ.7,042 முதல் அதிகபட்சமாக ரூ.9,139 வரையிலும், கிழங்கு ரக மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.6,752 முதல் அதிகபட்சமாக ரூ.7,342 வரையிலும், பனங்காலி மஞ்சள் ரூ.11,605 முதல் அதிகபட்சமாக ரூ.15,022 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.60 கோடிக்கு மஞ்சள் ஏலம் நடைபெற்றது.

Next Story