ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி தொடர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை அசோக் சொல்கிறார்


ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி தொடர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை அசோக் சொல்கிறார்
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 2:30 AM IST)
t-max-icont-min-icon

ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி தொடர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை என்று முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி தொடர காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விரும்பவில்லை என்று முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி அசோக், உப்பள்ளியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

கூட்டணியில் விருப்பம் இல்லை

கூட்டணி அரசு மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 20 பேர் அதிருப்தியில் இருப்பதாக பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா கூறி இருக்கிறார். அவர் கூறி இருப்பதில் என்ன தவறு இருக்கிறது. ஜனதாதளம்(எஸ்) கட்சியுடன் கூட்டணி அமைத்ததில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு விருப்பம் இல்லை. 37 எம்.எல்.ஏ.க்களை வைத்துள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சியை சோ்ந்த குமாரசாமி முதல்-மந்திரியாக இருப்பதும் பிடிக்கவில்லை. அதனால் 20-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பது உண்மை.

அவர்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் தங்களது பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளனர். அதனை தான் எடியூரப்பா கூறி இருக்கிறார். ஜனதாதளம்(எஸ்) மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது இரு கட்சிகளின் அடிமட்ட தொண்டர்களும் ஏற்றுக்கொள்ளவில்லை. நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்வார்கள். இதன் மூலம் கூட்டணி அரசு கவிழும். பா.ஜனதா ஆட்சி அமைக்கும்.

ஜனதாதளம்(எஸ்) கட்சியில் இருந்து...

காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்ததற்காக உமேஷ் ஜாதவ் மீது தவறான குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். சிஞ்சோலி தொகுதியின் வளர்ச்சிக்காக கூட்டணி அரசில் நிதி ஒதுக்கவில்லை. உமேஷ் ஜாதவ் கலபுரகியில் வளருவது மல்லிகார்ஜுன கார்கேவுக்கு பிடிக்கவில்லை. அவரை காங்கிரசில் இருந்து ஓரங்கட்ட அவர் முயன்றார். அதனால் காங்கிரசில் இருந்து விலகி அவர் பா.ஜனதாவில் சோ்ந்துள்ளார். அதில் என்ன தவறு இருக்கிறது.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, ஜனதாதளம்(எஸ்) கட்சியில் தான் இருந்தார். அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா முதல்-மந்திரியாகவும் இருந்துள்ளார். அப்படி இருக்கும் பட்சத்தில் உமேஷ் ஜாதவ் மீது சித்தராமையா உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் குற்றச்சாட்டு கூறுவது ஏன்?.

இவ்வாறு அசோக் கூறினார்.

Next Story