பைகளாக மாறிய கொடிகள்
ஐ.பி.எல். போட்டிகளில் தங்கள் அபிமான அணிகளை உற்சாகப்படுத்த ரசிகர்கள் கையில் கொடிகள், பேனர் களுடன் மைதானத்தை வலம் வருவார்கள்.
போட்டி முடிவடைந்ததும் கொடிகளும், பேனர்களும் மைதானத்தில் ஆங்காங்கே சிதறி கிடக்கும். அவைகளை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பைகளாக உருமாற்றி புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இந்த நிகழ்வு பெங்களூருவில் நடந்தேறி இருக்கிறது.
அங்குள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூரு அணி ரசிகர்கள் பயன்படுத்திய 1500 கொடிகள் மற்றும் பேனர்களில் இருந்து 750 கைப்பைகள் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான முயற்சியில் தன்னார்வ குழு ஈடுபட்டு வெற்றி கண்டிருக்கிறது. இந்த குழு மூலம் சேகரிக்கப்பட்ட கொடிகள் மற்றும் பேனர்கள் டெய்லர்களின் துணையோடு நேர்த்தியான கைப்பைகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இவை பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக புழக்கத்தில் விடப்பட்டுள்ளன.
இந்த பைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட வெங்கட்ராமன் கூறுகையில், ‘‘ஒவ்வொரு பையும் 15 அங்குலம் உயரம், 18 அங்குலம் அகலம் கொண்டவை. அதில் 5 முதல் 6 கிலோ வரை காய்கறிகளை நிரப்பலாம். ஒவ்வொரு பகுதி யிலும் இரு கொடிகளை கொண்டு தரமான பைகளாக உருவாக்கி இருக்கிறோம்’’ என்றார்.
Related Tags :
Next Story